ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ரத்தினவேல் பூஜை
தேவகோட்டை ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ரத்தினவேல் பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை வழிபாடு நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிக ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் முருகப்பெருமானின் ரத்தினவேல் பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ரத்தினவேலுக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து நகர்வலம் வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜை வழிபாடு நடைபெற்றது. பல்வேறு பகுதியிலிருந்து வந்த சிவனடியார்களுக்கு அன்னபளிப்பு பூஜையை நடத்தி மகேஸ்வர வழிபாடு செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.