in

செஞ்சி அருகே வேணில் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் தப்பி ஓட்டம் போலீஸ் விசாரணை

செஞ்சி அருகே வேணில் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் தப்பி ஓட்டம் போலீஸ் விசாரணை

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை.

செஞ்சி அடுத்த நங்கிலி கொண்டான் சுங்க சாவடியில் நேற்று இரவு செஞ்சி டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் வேகமாக வந்த வேன் திடீரென சாலையில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

-சந்தேகமடைந்து போலீசார் வேனை சோதனை செய்த போது வானில் 50 மூட்டைகளில் 4 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக வேனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தப்பி ஓடிய வேன் டிரைவர் மற்றும் வேன் யாருடையது எங்கிருந்து வருகிறது என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

What do you think?

இரண்டு மாசமாவது இருப்பேன்.. இன்னு நினைச்சேன்… அழுது புலம்பிய தர்ஷா குப்தா

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை