இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் 15-ம் நாள் ஸ்ரீ விராட பருவ உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா என்னும் தீமிதி திருவிழா 15-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ அர்ஜுன மகாராஜா, ஸ்ரீ சித்ராங்கை பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தெய்வங்களுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து மின்விளக்களால் வழங்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விராட பருவ உபயதாரர்கள் சமயம்,கணாச்சாரி மற்றும் இரட்டணை கிராம தேவதைகள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்