in

இந்த அரசு பூஜ்யம் மதிப்பெண் தான் பெற்று இருக்கிறது ஆர் பி உதயகுமார் பேச்சு


Watch – YouTube Click

காய் வாங்க வருபவர்கள் எல்லாம் நோய் வாங்கிச் செல்லும் அவல நிலை உள்ளது

ஜனநாயகத்தை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கின்ற அரசுக்கு எப்போதும் நிலைத்ததாக வரலாறு கிடையாது இந்த மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

ஆர் பி உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாடிப்பட்டி பகுதியில் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் துவக்கி வைத்தார்

பின்பு செய்தியாளரிடம் பேசிய போது:

மிச்சாம் புயல் போல தும்பை விட்டு வாழை பிடிக்கின்ற நிலையாக இருக்கக் கூடாது வருமுன் காப்போம் என்ற நிலையை கையில் எடுக்க வேண்டும் வந்தபின் பார்ப்போம் என்ற நிலையில் தான் இந்த திமுக அரசு செயல்படுகிறது

மதுரையில் சுமார் 10,000 பேர் வருகின்ற மாட்டுத்தாவணி பேருந்து நிலைய அருகில் உள்ள பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட் எல்லாம் சேரும் சௌக்கியமாய் இருக்கிறது காய் வாங்க வருவோர் எல்லாம் நோய் வாங்கிச் செல்லும் அவல நிலை உள்ளது

மூன்றாண்டு கால சாதனை என்று கூறுகிற கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தண்ணீர் புகுந்து தரைத்தளம் முழுவதுமாக தண்ணீரிலே மூழ்கி இருக்கிறது

நவம்பர் மாதத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திறந்து வைத்த பாலம் சேதமடைந்து சீர் செய்யப்பட்டிருக்கிறது

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தண்ணீர் தாலுகா அலுவலகத்தில் தண்ணீர் மீனாட்சி அம்மன் கோவிலிலே தண்ணீர் என்று எல்லா இடங்களிலும் தண்ணீராக இருக்கிறது

கோடை வெயிலில் ஹிட் ஸ்ட்ரோக் காரணமாக மக்கள் இறக்கம் சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை அதேபோல் கோடை மலையில் இந்த தடுப்பு நடவடிக்கை என்பது நிவாரண பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கவில்லை

இயற்கை மலையை தடுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது ஆனால் தற்காப்பு செய்து கொண்டு அதனை பாதுகாப்பாக எதிர்கொள்ளலாம் அதை இந்த அரசு செய்ய முன்வர வேண்டும்

திமுக அரசு தடுப்பணை பத்தாயிரம் கோடியில் கட்டுகிறோம் 20000 கோடியில் கட்டுகிறோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் எடப்பாடி யார் அறிவித்து செயல்படுத்தி அரசாணை வெளியிட்ட தடுப்பணையை திமுக அரசு கிடைப்பில் போட்டுள்ளது

விவசாயத்தைப் பற்றி முதலமைச்சருக்கு தெரியுமா தெரியலையா புரியுமா புரியலையா ஏனென்றால் அவர் முதலமைச்சர் மகனாகப் பிறந்த காரணத்தினால் விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்வதற்கும் மக்களின் கண்ணீரை பற்றி தெரிந்து கொள்வதற்கும் அவர் முயற்சி இனி வருகின்ற காலங்களில் ஆவது முயற்சி எடுப்பாரா உதயநிதி ஸ்டாலினும் அந்த வழியிலே முயற்சி எடுப்பாரா என்று மக்கள் சொல்லாத துயரத்தில் இருக்கிறார்கள் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்

நீர்நிலைகளை பாதுகாப்பதில் இந்த அரசு பூஜ்யம் மதிப்பெண் தான் பெற்று இருக்கிறது

மக்களை பாதுகாக்க நிலக்கோட்டையில் காவல் ஆய்வாளராக இருக்கிற ஆய்வாளர்கள் வீட்டிற்கு பாதுகாப்பு இல்லை கொலை கொள்ளை கற்பழிப்பு வழிப்பரி திருட்டு நடைபெறாத நாளே இல்லை காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத போது சாமானியம் மக்களுக்கு எங்கு இருக்கிறது பாதுகாப்பு

ஜனநாயகத்தை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கின்ற அரசுக்கு எப்போதும் நிலைத்ததாக வரலாறு கிடையாது இந்த மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்


Watch – YouTube Click

What do you think?

காட்டு யானைகள் வழித்தடத்தை அடைக்கப்பட்டதால் ஊருக்குள் நுழைந்தது

என்ன பெரிய்ய ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்கூல் ஆஃப் புரோட்டா தெரியுமா?