பட்டாவை, மனைபட்டாவாக புதுப்பித்துதர கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய பட்டாவை, மனைபட்டாவாக புதுப்பித்துதர நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடாமங்கலம் தாலுக்கா விஸ்வநாதபுரம் ஊராட்சி கிளரியம் கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள்
40 ஆண்டுகளுக்கு மேல் அரசால் வழங்கப்பட்ட மனைப்பட்டா நடைமுறைக்கு இல்லாததால் பட்டாவை புதுப்பித்துதர மனு அளித்தனர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டமாக இருந்தபோது நன்னிலம் தாலுக்காவில் கிளரியம் கிராமம் இருந்தது. அப்போது அங்கு வசித்த கிளரியம் கிராமமக்களாகிய எங்களுக்கு அரசு இலவச மனை பட்டா வழங்கியது.
பின்னர் திருவாரூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு நீடாமங்கலம் தாலுகாவாக மாறியதில் கிளரியம் கிராமம் சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் எங்களது மனைபட்டா திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறையில் இல்லை ,
இதனைத் தொடர்ந்து 25 ஆண்டுகளாக மனுஅளித்தும், போராட்டம் நடத்தியும் மனைபட்டா புதுப்பித்து தராததால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்