in

மு.க ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆட்சியின் சாதனைகள் குறித்து விவாதிக்க தயார்…


Watch – YouTube Click

மு.க ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆட்சியின் சாதனைகள் குறித்து விவாதிக்க தயார்…

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்காக பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளராக சுர்ஜித் சங்கர் என்பவர் போட்டியிடுகிறார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூரில் தெற்கு வீதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ், முன்னாள் அமைச்சர் ஓ எஸ். மணியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுகூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் நெல் மணிகள் மற்றும் திருவாரூர் தேர் கொடுத்து வரவேற்றார்.

நேற்று சேலத்தில் ஸ்டாலின் பேசினார்.. இன்று அவர் ஊரில் திருவாரூரில் நான் பேசுகிறேன்.. 40 தொகுதிகள் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால் 40 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெறும்.. அனைத்து தொகுதிகளிலும் 520 பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் ஸ்டாலின்.. பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி.. ஆனால் திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சி எப்போது போகும் என மக்கள் பேசி வருகிறார்கள்.. ஊழல் செய்ததில் முதன்மை முதல்வர் ஸ்டாலின்

லைட்டா வந்த புயலுக்கே ஸ்டாலின் தாக்கு பிடிக்க முடியவில்லை ஆனால் அதிமுக பல புயல்களை எதிர்கொண்டோம்.. தண்ணீர் தேங்கியதற்கே கத்துகிறார். நிதி கொடுக்கவில்லை என்று கூறுகிறார்.. மத்தியில் ஆழ்கின்றவர்கள் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார். அதனால் தான் தேசிய கட்சிகள் உடன் கூட்டணி இல்லை என தெரிவித்தோம்.. கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு எங்களை பற்றி ஏன் பேச வேண்டும் தோல்வி பயம் வந்து விட்டது… பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறுபவர் ஸ்டாலின்.. மதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை கூட்டணியில் இணைந்து அந்த கட்சியின் தலைவரை அழவைக்கிறார்.

பாமக.. பருவத்திற்கு ஏற்றார் போல் பழம் மாறி விடுகிறது.. மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் இனிமேல் உங்கள் நடிப்பு எடுபடாது ஸ்டாலின்.. செங்கலை ஊர் ஊராக சுற்றி வருகிறார் உதயநிதி. 2019ல் அதிமுக ஆட்சிகாலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட்டது.. செங்கல்லை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்ட வில்லை.. ஒரே மேடையில் அமர்ந்து பேசுவோம் எங்கள் ஆட்சி பற்றியும் உங்கள் ஆட்சி பற்றியும் விவாதிக்க தயாரா… தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக மத்திய அரசு திட்டம் கொண்டுவந்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்.

வடிவேல் 23ம் புலிகேசி படத்தில் வெள்ளை கொடியை ஏந்திய வேந்தரே ‌என காட்சி வரும். அது போல் பிரதமருக்கு வெள்ளை கொடை ஏந்திய பொம்மை முதல்வர் ஸ்டாலின்.. நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு ஸ்டாலின் பேர் வைத்து வருகிறார். ஒரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு வர முடிந்ததா. நாங்கள் பல கல்லூரிகளை திறந்தோம். தமிழகத்தில் உயர்கல்வி அதிகம் பயின்ற ஆட்சி அதிமுக ஆட்சி.. மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஊழல் மட்டும் தான் செய்துள்ளனர். 2ஜி வழக்கை மத்திய அரசு மீண்டும் தட்டி எடுத்துள்ளது. பல பைர் உள்ளே செல்ல இருக்கிறார்கள்..

கவர்னர்னரிடம் நாங்கள் ஊழல் பட்டியல் கொடுத்தோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு மட்டும் ஆளுநர் சாதகமாக நடக்கிறாரா. அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த தேர்தல் ஓடு ஆட்சி கவிழ்ந்து விடும்.. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள்.. அதிமுக ஆட்சி காலத்தில் 12110 கோடி கடன் தள்ளுபடி செய்தோம் என பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் பாஜக வேட்பாளர்கள்