in

நாகையில் 1 25 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு


Watch – YouTube Click

நாகையில் 1 25 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகையில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் நடவடிக்கை

நாகப்பட்டினம் அடுத்த புத்தூரில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் சொக்கலிங்கம் பிள்ளை அன்னசத்திரம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்த நிலையில் சொக்கலிங்கம் பிள்ளை சத்திரத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனை அடுத்து சொக்கலிங்கம் அறக்கட்டளை கைங்கரிய சபா தலைவர் சண்முகம் நாகப்பட்டினம் மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசனிடம் இடத்தை மீட்க கோரி புகார் அளித்தனர். இதனையடுத்து இன்று இணை ஆணையர் குமரேசன் தலைமையில் துணை ஆணையர் ராணி மற்றும் தனி வட்டாட்சியர் அமுதா முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான 17 ஏர்ஸ் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட இந்த இடத்தின் அரசு வழிகாட்டி மதிப்பு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சொக்கலிங்க அன்ன சத்திரத்திற்கு சொந்தமான இடம் என விளம்பர பலகை வைத்தனர்


Watch – YouTube Click

What do you think?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடேசபுரத்தில் சாலை ஓர கால்வாயில் கவிழ்ந்த மினி பேருந்து

மின்வாரிய நிரந்தர பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்