ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்ந்து நாகையில் கடல் சீற்றம் ; வெறிச்சோடி காணப்படும் துறைமுகம்
நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதை தொடர்ந்துநேற்று காலை முதல் கனமழையானது பெய்து வருகிறது.மேலும் புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இதனால் நாகை கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டை செருதூர் வேளாங்கண்ணி வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும் மீன்வளத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக 700 விசைப்படகுகள் 3500 பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நாகை மீன்பிடித் துறைமுகம் புயல் அறிவிப்பு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக ஆறு ஏரிகளில் பிடிக்கப்படும் மீன்களை சிறு மீன் வியாபாரிகள் பொதுமக்கள் யாரும் வராததால் மீன் விற்பனை இல்லாத காரணத்தால் வேதனை அடைந்துள்ளனர். மீனவர்கள் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த ஒரு வார காலமாக தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாகவும், இதனால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு மழைக்கால நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்