in

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித் திருவிழா சிவப்பு சாத்தி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித் திருவிழா சிவப்பு சாத்தி

 

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித் திருவிழா 7-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார். திரளான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோசத்துடன் சுவாமி தரினம் செய்தனர்,

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா கடந்த 03-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் தனித்தனி வாகனங்களில், எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 7-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1-00 மணிக்கு திறக்கப்பட்டு 1-30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும் 2-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. இதனையடுத்து காலை சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி,தெய்வானை அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்கச் சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவப்புச் சாத்திக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார். சுவாமி சன்முகரின் பின்புறம் சுவாமி நடராஜர் கோலத்திலும் காட்சி கொடுத்தார்.

அப்போது பக்தர்கள் சிவப்பு வண்ண மலர்களை தூவி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசங்கள் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை சுவாமி சண்முகர் பச்சைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

What do you think?

மன்னார்கோயில் அருள்மிகு இராஜகோபால சுவாமி – குலசேகர ஆழ்வார் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா

கீழச்சிவந்திபுரம் சிரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா