மதுரையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒன்றரை சவரன் நகையை பறித்துச் சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே உள்ள பந்தடி 9 வது தெருவில் வசித்து வருபவர் துவாரகன் – மஞ்சுளா தம்பதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் மாட்டுத்தாவணி வரை சென்றுள்ளனர்.
பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நிலையில் வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தம் நேரத்தில் கண் இமைக்கும் வேளையில் R15 ரக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர், அந்த நேரத்தில் மஞ்சுளா நகையை தனது கைகளால் இருக்கமாக பிடித்து கொண்டதால் மஞ்சுளாவை தர தரவென 100 மீட்டர் தொலைவிற்கு இழந்து சென்றனர்,
இதில் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையின் பாதி நகை கொள்ளையர்கள் கைகளில் சிக்கியது மீதி நகை மஞ்சுளா கைகளில் இருந்தது, கிடைத்த வரை லாபம் என கொள்ளையர்கள் கையில் கிடைத்த ஒன்றரை சவரன் நகையுடன் தப்பிச் சென்றனர், கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் மதுரை மாநகர தெற்குவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.