விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
அதில்,100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி நகர்ப்புறங்களில் விரிவுபடுத்தப்படும்.மேலும் சம்பளத்தை அதிகரிக்க விசிக குரல் கொடுக்கும்.
ஆவண கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றவேண்டும்.
வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ரத்து.
கல்வி, விவசாய கடன் ரத்து.நீட் தேர்வு ரத்து.இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, அனைத்து மொழிகளின் நலன் பாதுகாக்க குரல் எழுப்பப்படும்.
ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது.ஆளுநர் பதவி ஒழிக்க வேண்டும்.அனைத்து மாநில மொழிகளிலும் அம்பத்கர் நூல்கள்.
தனியார்மயமாக்குவதை கைவிடுதல்.கச்சத்தீவு மீட்க குரல் எழுப்பப்படும்.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை.பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை.
தேர்தல் ஆணையர் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கு தனி வங்கி அமைக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழலை விசாரணை நடத்த வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க குரல் கொடுப்போம்.