தேரிழந்தூரில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
தேரிழந்தூரில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாற்று மத சகோதரர்கள் திரளாக பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம குத்தாலம் அடுத்த தேரிழந்தூரில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இந்த பள்ளிவாசலில் நேற்று எதிர்வரும் ரம்ஜான் பெருவிழா பண்டிகையை முன்னிட்டு அல் அக்ஸா நண்பர்கள் சார்பாக சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஊர் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இஃப்தார் நோன்பு திறப்புக்கு பின்னர் தொழுகை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை ஊர் ஜமாத்தார்கள் நிர்வாகிகள் மற்றும் அல் அக்ஸா நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.