பிரபல எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மறைவு
91 வயதாகும் பிரபல மலையாள எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.
கேரள அரசு 2 நாட்கள் துக்கம் அனுசரிக்க அறிவித்துள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமானவர் எம்டி வாசுதேவன் இலக்கியம் மற்றும் திரைப்படத் துறைகளில் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்கிறார்.
அக்காலத்தின் வாழ்க்கை, மொழி, சொற்பொழிவு மற்றும் மக்களின் கொந்தளிப்பு ஆகியவற்றை தனது எழுத்துக்களின் முலம் எதிரொலிக்க வைத்தவர்.
அவரது நாவல்களான நாலுகெட்டு, அசுரவித் மற்றும் காலம் ஆகியவை கேரளா குடும்பங்களின் துயரங்களையும் இன்னல்களையும் கையாண்டன. இவர் சிறுவயதிலிருந்தே எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தால் சிறுகதைகள் எழுத முற்பட்டவர் பின் நாளில் நாவல்களை உருவாக்கும் வல்லமை படைத்தார் சிறந்த எழுத்தாளர் என்ற விருதை பெற்றவர் தனது’ 23 வயதில் எழுதிய நாளுக்கு எட்டு என்ற நாவலுக்கு கேரளாவின் சாகித்திய அகாதமி விருதையும் பெற்றார்.
இதுவரை 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் இவர் சமீபத்தில் எழுதிய மனோரதங்கள் அந்தாலஜியாக உருவாகியுள்ளது அதில் மம்முட்டி மோகன்லால், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க கமல் வாய்ஸ் over கொடுத்தார்.
உடல்நிலை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் திடீரென்று மாரடைப்பு காரணமாக 91 வயதில் உயிர்நீத்தார், இலக்கிய உலகில் மட்டும் அல்ல திரையுலகில் பல சாதனைகளை படைத்த அவரின் இறப்பு ரசிகர்களுக்கு பேரிழப்பு ஒரு மாபெரும் எழுத்துகளஞ்சியத்தை இழந்திருக்கிறோம். இலக்கிய ஆளுமை நம்மை விட்டு பிரிந்து இருக்கிறது என்று கமலஹாசன் xதலத்தில் தனது இரங்களை தெரிவித்துள்ளார்.