in

புதுச்சேரி ஆளுநர் அளித்த குடியரசு தின விருந்து

புதுச்சேரி ஆளுநர் அளித்த குடியரசு தின விருந்து…முதல்வர்- அமைச்சர்கள்- எதிர்க்கட்சிகள் பங்கேற்பு..பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட தவில் இசைக் கலைஞரின் இசை நிகழ்ச்சி..

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீரில் இருந்து இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தலைமையின் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஆளுநர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் வைத்தியநாதன், திமுக மாநில அமைப்பாளர் சிவா மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ள தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்தியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை விழாவில் பங்கேற்ற அனைவரும் கண்டு ரசித்தனர்.

இதை தொடர்ந்து கலைஞருக்கு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் சால்வை அறிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

What do you think?

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

மதுவுக்கு எதிராகவும் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் பெண்கள் விழிப்புணர்வு பேரணி