சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு தின விழா. மேள, தாளங்கள் முழங்க தேசியக் கொடியை எடுத்து வந்து கோயில் கோபுரத்தில் தீட்சிதர்கள் கொடியேற்றினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம்.
அதுபோல் இந்தாண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடியை நடராஜர் சன்னதியில் வைத்து படைத்தனர். பின்னர் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் மேள, தாளங்கள் முழங்க தேசியக் கொடியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் கழியில் கொடி கட்டப்பட்டு கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.