புதுச்சேரி கடற்கரை சாலை,காந்தி திடலில் குடியரசு தின விழா கோலாகலம்.
துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறை பல்வேறு படை பிரிவினர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி அரசு சார்பில் குடியரசு தின விழா, கடற்கரை சாலையில் விமர்சையாக கொண்டாடப்பட வருகிறது. விழா மேடைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் காலை 8:25 மணிக்கு வருகை தந்தார்.தலைமை செயலர் சரத் சவுகான் வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றார்.
சரியாக 8.30 மணிக்கு துணை நிலை கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து,போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது, பரிசு வழங்குகிறார்.
தொடர்ந்து, போலீசார், தீயணைப்பு படையினர், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டவர். பல்வேறு துறைகளின் சாதனை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார வாகனங்களில் ஊர்வலம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையிட்டார். சிறந்த அணிவகுப்பு, அலங்கார வாகனங்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை கண்டு களித்தனர்.
குடியரசு தின விழாவையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம்,வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.