செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா-செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ முன்னிலையில் வட்டாட்சியர் ஏழுமலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் 76 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,செஞ்சி பேரூராட்சி அலுவலகங்களில் நாட்டின் 76 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை,வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன்,பேரூராட்சி செயல் அலுவலர் கோபால், போன்றோர்தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதில் போக்குவரத்து ஆய்வாளர் அப்பண்டை ராஜ்,உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் கொண்டனர்.