நாட்டின் 76 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மூவர்ண பலூன்களை பறக்க விட்டார் :-
இந்திய திருநாட்டின் 76ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து காவல்துறை, தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட ஆட்சியர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைதொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தன் கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு கண்டுக்களித்தனர்.