in

பொங்கல் சிறப்பு தொகுப்பில் நெட்டி மாலைகளை வழங்க கோரிக்கை

பொங்கல் சிறப்பு தொகுப்பில் நெட்டி மாலைகளை வழங்க கோரிக்கை

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக மாட்டுப் பொங்கலுக்கு நெட்டி மாலைத் தொழில் செய்துவரும் குடும்பத்தினர். இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் மாலைகளை தவிர்க்கவும், பொங்கல் சிறப்பு தொகுப்பில் நெட்டி மாலைகளை வழங்கவும் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல், மூங்கில் தோட்டம் நலத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறையை சார்ந்தவர்கள் மாட்டுப் பொங்கல் அன்று கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் இயற்கையான நெட்டி மாலை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மூன்றாவது தலைமுறையாக தற்போதும் இந்த நெட்டி மாலை தயாரிப்பு தொழிலை கைவிடாமல் செய்துவரும் இப்பகுதி மக்கள் நெட்டி மாலை தயாரிப்புக்கு என மூன்று மாதங்களுக்கு முன்பே ஆந்திரா, பாண்டிச்சேரி, பின்னத்தூர் ஏரி, வீராணம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரி பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி நெட்டி செடிகள் மற்றும் தாழை நாற்களை சேகரித்து வந்து பதப்படுத்தி, அளவாக நறுக்கி, சாயம் நனைத்து, வண்ண வண்ண இயற்கையான மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு இல்லாத நெட்டி மாலைகளை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நெட்டி மற்றும் தாழை நார்களை சேகரித்த மேலவள்ளம் மக்கள் விலை உயர்ந்த பட்ட சாயங்களை வாங்கி வந்து மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மினுமினுக்கும் பிளாஸ்டிக் மாலைகளின் வரவால் நெட்டி மாலைகளின் வியாபாரம் மந்தமடைந்துள்ளது.

கூலி தொழிலாளர்களான இவர்கள் மாலை தயாரிக்க கடன் வாங்கி தொழிலை செய்யும் நிலையில் மட்டுமே உள்ளனர். எனவே நெட்டி மாலை தயாரிக்கும் தங்களுக்கு தமிழக அரசு குறைந்த வட்டியிலான கடன் உதவி வழங்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் மாலைகளை கால்நடைகளுக்கு அணிவிக்காமல் இயற்கையாக தாங்கள் தயாரிக்கும் நெட்டி மாலையை வாங்கி உபயோகப்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு உங்களை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ள சிறப்பு தொகுப்பில் மாட்டுப் பொங்கலுக்கு கொண்டாடும் நெட்டி மாலைகளையும் தங்களிடம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

திருவண்ணாமலையில் மண்சரிவு விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி

அந்த படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம்