in

அரிசி, பருப்பு உணவு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை

அரிசி, பருப்பு உணவு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை

 

அத்தியாவசதிய பொருட்களான அரிசி, பருப்பு உணவு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் மதுரையில் நடந்த நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க ஆண்டு விழாவில், அரசுக்கு கோரிக்கை

அத்தியாவசதிய பொருட்களான அரிசி, பருப்பு உணவு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என மதுரையில் நடந்த நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க ஆண்டு விழாவில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

33-வது ஆண்டு விழா

மதுரை மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 33-வது ஆண்டு விழா, விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள மகாலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். செயலாளர் வினோத் கண்ணா வரவேற்றார். தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், தயாரிப்பு நிறுவனங்களோடு வினியோகஸ்தர்கள் நேருக்கு நேர் கலந்துரையாடி புதிய வினியோக வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலான அரங்கங்களை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். வக்கீல் தியாகராஜன் ஜி.எஸ்.டி குறித்த விளக்க உரை நிகழ்த்தினார். சமீபத்தில் வருமான வரி சட்டத்தில் உள்ள மாற்றங்களை குறித்து பட்டையகணக்காளர் முகமதுகான் விளக்கி பேசினார். இதில், தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட அரங்கங்கள் மூலம் வினியோகஸ்தர்கள் புதிய வணிக வாய்ப்பை பெற்றனர். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சங்க செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

அரசுக்கு கோரிக்கை

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசதிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். அதுபோல், 12, 18 சதவீதமாக இருக்கும் வரி விதிப்புகளை முற்றிலும் நீக்கிவிட்டு 5 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

What do you think?

அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா

கோடை வெயிலை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா