சாலையை சீரமைத்து போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு கோரிக்கை
மழை காரணமாக கல்லூரிக்கு செல்லும் சாலை சேதம், 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளதால் மாணவ மாணவிகள் வருகை குறைந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. தற்போது 5 பாடப்பிரிவுகளுடன் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாதிரிமங்கலம் பகுதியில் உள்ள மிகச் சிறிய சமுதாயக் கூட்டத்தில் இட நெருக்கடியுடன் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரிக்கு செல்லும் சாலை, தார் சாலையாக இல்லாத காரணத்தால் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையில் சாலை முழுவதும் சேரும் சகதியமாக காணப்படுகிறது.
இதனால் மாணவ மாணவிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்க நேரிடுகிறது. அணிந்திருக்கும் ஆடைகள் சேர் பூசியதாய் மாறி விடுகிறது. இதன் காரணமாக இன்று கல்லூரிக்கு மிகக்குறைந்த அளவிலான மாணவ மாணவிகளே வருகை புரிந்தனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைத்து மாணவ மாணவிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.