in

கொள்ளிடம் ஆற்றின் கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் கரையிலேயே காத்து கிடக்கும் பொதுமக்கள்

கொள்ளிடம் ஆற்றின் கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் கரையிலேயே காத்து கிடக்கும் பொதுமக்கள்

கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராம சாலை துண்டிப்பு.1.40 லட்சம் கனஅடி வெள்ளநீர் செல்வதால் கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் முகாம்களுக்கு வராமல் கரையிலேயே காத்து கிடக்கும் பொதுமக்கள் வயிர் பாதிப்புக்குரிய நிவாரணம் வழங்க கோரிக்கை:-

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர் முழுவதும் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக வெள்ள நீர் முழுவதும் காவிரி ஆற்றின் வழியே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

அந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே வங்க கடலில் கலந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வந்து கொண்டுள்ளது.

இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமமான சந்தைபடுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்து வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது

தண்ணீர் வரத்து தொடர்ந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வரும் நிலையில் தீயணைப்பு மீட்புத்துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், மருத்துவக் குழுவினர், காவல் துறையினர் வருவாய்த் துறையினர், உள்ளிட்டோர் பாதிக்கப்படும் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். வெள்ள நீர் அதிகரிக்கும் நிலையில் கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அந்தந்த கிராமங்களில் படகுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் முகாம்களுக்கு வராமல் ஆற்றின் கரைகளில் அமைக்கப்பட்டுள்ள தகர ஷெட்டுகளிலும், மேடான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தங்கி உள்ளனர். தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினால் கால்நடைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதற்காக அங்கே ஏன் தங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 700 ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு கத்தரி மிளகாய் செடிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

செஞ்சி ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

ஒரு அலுவலக உதவியாளரை கூட அனுப்ப முடியவில்லை என்று லெப்ட் ரைட் வாங்கிய மாவட்டம் வருவாய் அலுவலர்