in

தஞ்சையில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

தஞ்சையில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

 

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிற ஒன்றிய அரசை கண்டித்து
திருச்சியில் மே முதல் வாரத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாநில அளவிலான மாபெரும் கண்டன கூட்டம் நடத்திட முடிவு .. அதனை தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்திட தஞ்சையில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்….

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் , திமுக மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன்‌தலைமையில் தஞ்சையில் இன்று நடைபெற்றது…

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு.AKS விஜயன்…

மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிப்பது, விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறியது, பெருமழை, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ரூ. 1 கூட வழங்காதது உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சியில் மே முதல் வாரத்தில் கண்டனக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளைத் திரட்டி மிகப் பெரிய அளவில் இக்கூட்டம் நடத்தப்படும். இதற்காக ஒரு மாத காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் நடத்தி ஒருங்கிணைக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இக்கண்டனக் கூட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து, தில்லியிலும் போராட்டம் தொடரும் என்றார் விஜயன்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர்கள் பி.எஸ். மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு), சாமி. நடராஜன் மார்க்சிஸ்ட் ணகம்யூனிஸ்ட் கட்சி சார்பு), எஸ்.கே.எம். மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…

What do you think?

அதிமுக அமைப்புச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு ஓ. பன்னீர்செல்வம் அஞ்சலி

தொடர் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை!. ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு