in

ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி சந்திரன் பாஜகவில் இணைந்தார்


Watch – YouTube Click

ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி சந்திரன் பாஜகவில் இணைந்தார்

 

புதுச்சேரியின் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி சந்திரன் இன்று கட்சியின் மாநிலத்தலைவர் செல்வகணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜனதாவில் இணைந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு நலனும் மக்கள் நலனும் கொண்ட ஒரே கட்சி பாஜக. இதற்காக தினமும் 21 மணி நேரம் பிரதமர் மோடி உழைக்கிறார். அதனால் பாஜகவில் சேர்ந்தேன் என்றார்.

கடந்த 2014 முதல் நான் பணியில் இருந்தபோது ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் பணியும் ஆய்வுக்கு உட்கொள்ளப்பட்டு சேவை மக்கள் சென்றடைய வழி செய்துள்ளனர். பொருளாதாரத்தில் நாடு உயர்ந்து வருகிறது. சர்வீஸ் இருக்கும்போது உன்னிப்பாக கவனித்தேன். ஓய்வு பெற்ற பிறகு பாஜகவை தேர்வு செய்தேன் என்றும் சந்திரன் தெரிவித்தார்.

34 ஆண்டுகள் பணியில் இருந்தேன். எஸ்பி, எஸ்எஸ்பி, டிஜஜி, ஐஜியாக புதுச்சேரியில் இருந்தேன். பல பதவி எனக்கு கிடைத்தது. பதவியை எதிர்ப்பார்த்து கட்சியில் சேரவில்லை. மக்கள் சேவைக்காக சேர்ந்துள்ளேன். நாடு முழுவதும் பணியாற்றியுள்ளேன்.

புதுச்சேரி, அருணாசலபிரதேசம், மிசோரம், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் பணியாற்றினேன் என்றும் தேர்தல் பார்வையாளராக உ.பி, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினேன்.

பிஎச்டி படித்தது, காவல்துறை அனுபவம் உள்ளது. காவல்துறை சிறிய துறை. அதைதாண்டி கட்சியில் இணைந்தால் மக்கள் சேவையாற்ற சேர்ந்தேன். வாரிசு ஏதுமில்லாமல் சுய உழைப்பால் உயர்ந்தோர் பாஜகவில் அதிகம். தேர்தல் நேரத்தில் போட்டியிடும் காரணத்துக்காக இணையவில்லை. கட்சியை வலுப்படுத்தவே இணைந்தேன் என்றும் சந்திரன் தெரிவித்தார்…


Watch – YouTube Click

What do you think?

ஹாலோ பிளாக் ஃபேக்டரி மற்றும் நிலத்தை அபகரிக்க திமுக பிரமுகர் மணிகண்டன் மிரட்டல்

பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு