ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா
இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகியுள்ள ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சூர்யாவின் அப்பா சிவகுமார் சூர்யாவை பற்றி மேடையில் பேசிய கருத்துக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது நடிகர் சூர்யாவிற்கு சினிமாவில் நாட்டமே இல்லை அவர் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது என்னுடைய நண்பரான ஜோசியர் வீட்டிற்கு வந்து சூர்யாவின் ஜாதகத்தை பார்த்து இவர் சினிமாவில் ஹீரோவாக கலக்குவார் என்று கூறினார்.
எனக்கும் சூர்யாவுக்கும் அதில் நம்பிக்கை இல்லை ஆனால் இயக்குனர் வசந்த் நேருக்கு நேர் பாடத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதன் பிறகு இவர் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சூர்யா நடித்த ஒவ்வொரு படத்தின் இயக்குனர்களும் இவரை செதுக்கி செதுக்கி தான் இன்னைக்கு இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
சூர்யாவை செதுக்கிய அனைத்து இயக்குனருக்கும் எனது நன்றி என்று கூறினார் தனது தந்தையின் பேச்சைக் கேட்டு கன் கலங்கி விட்டார் நடிகர் சூர்யா.