உடல் உறுப்பு தானம் செய்த வருவாய் ஆய்வாளர் மாதவ சங்கர் உடலுக்கு அரசு மரியாதை
நெல்லையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த நெல்லை வருவாய் ஆய்வாளர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் அரசு மரியாதையுடன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாதவ சங்கர் இவருக்கு வயது 23 இவர் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி செய்து வருகிறார். மாதவா சங்கருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது மனைவி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளராக பணி செய்து வருகிறார் கடந்த 13 ஆம் தேதி பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நெல்லை மாவட்டம் செங்குளம் அருகே மாதவ சங்கர் வந்த இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.
இதில் பலத்த காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை நடந்து வந்தது. இந்த நிலையில் மாதவ சங்கர் மூளை சாவு அடைந்ததாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அவரது மனைவி ரங்க இந்திரா மற்றும் குடும்பத்தினர் சம்மதத்துடன் உடலுறவு தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் முன்னிலையில் உடல் உறுப்புகளை பாதுகாப்பாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர்.
தொடர்ந்து கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் உடலில் இருந்த கருவிழி மற்றும் சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதை அடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் உடல் உறுப்பு தானம் செய்த வருவாய் ஆய்வாளர் மாதவ சங்கர் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.