நட்சத்திரம் அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக அரிசி மளிகை பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க பட்டது
நட்சத்திரம் அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக அரிசி மளிகை பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க பட்டது
பெஞ்சல் புயலால் விழுப்புரம் திருவண்ணாமலை, கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. பொது மக்களின் அன்றாடம் இயல்பு நிலை வெகுவாக பாதிக்க பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் ஏராளமாக பாதிக்க பட்ட மாவட்டங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்க பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் ஏற்கனவே மூன்று கட்டமாக 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க பட்டது. இன்று நான்காம் கட்டமாக நட்சத்திரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக நிறுவனர் ஸ்டார்குரு மற்றும் பென்னர் சார்பில் 2000 மூடைகள் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் போர்வைகள் மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்னைக்கு வெள்ளம் புயல் நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன் அவர்களிடம் வழங்க பட்டது. .
இந்நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் சிவபாலன், ஆர்.ஐ. சரவணன், வக்கீல். முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய வெள்ளம் பாதிக்க பட்ட பகுதி மக்களுக்கு வழங்க படுமென மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.