in

இங்கிலாந்து தேர்தல் தோல்விக்காக ரிஷி சுனக் முன்னாள் எம்.பி.க்களிடம் மன்னிப்பு கோரினார்

இங்கிலாந்து தேர்தல் தோல்விக்காக ரிஷி சுனக் முன்னாள் எம்.பி.க்களிடம் மன்னிப்பு கோரினார்

 

பிரிட்டிஷ் முன்னால் பிரதம மந்திரி ரிஷி சுனக் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களின் மோசமான செயல்திறனுக்காக மன்னிப்பு கோரினார்.

அவர் யார்க்ஷயரில் உள்ள ரிச்மண்ட் மற்றும் நோர்தாலர்டனின் தனது’ சொந்த தொகுதியில் ரிஷி வென்றார்.

மேலும் டோரிகள் தனது வாரிசைத் தேர்ந்தெடுக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்.

44 வயதான ரிஷி வெள்ளிக்கிழமை 10 டவுனிங் தெருவில், தனது பிரியாவிடை உரையில் தனது கட்சி சகாக்கள் மற்றும் தேசத்திடம் தோல்விக்காக மன்னிப்பு கேட்டார்.

அவர் டோரி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார், தொழிலாளர் கட்சி 650-ல் 411 எம்.பி.க்களுடன் மகத்தான வெற்றியைப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும்”அனைத்து கன்சர்வேடிவ் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரங்கள் செய்து அயராது உழைத்தும் வெற்றியடையாமல், போனதற்கு வருந்துகிறேன்” என்று சுனக் உரையில் கூறினார்.

அவருக்குப் பதிலாக கட்சித் தலைவர் பதவிக்கு வரும் முன்னணியினர் திரைக்குப் பின்னால் தங்கள் ஆதரவைத் திரட்டி வருகின்றனர். சுனக்கின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்த முன்னாள் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன்னும், தலைவர் பதவிக்கு போட்டிபோடுகிறார்.

What do you think?

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரின் முதல் வெளிநாட்டு பயணம்

பாரத ஸ்டேட் வங்கி கிளையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்