பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போளூரில் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போளூர் பேருந்து நிலையம் அருகே இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டத் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போளூர் காவல்துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி அனைவரையும் வேனில் ஏற்றி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.