in

மயிலாடுதுறையில் இறந்த குழந்தையை ப்ரீசர் பாக்ஸ் இல் வைத்து சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவரை அவசரகதியில் சஸ்பென்ட் செய்த சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வெளிமாவட்ட சிறப்பு மருத்துவர்களை கொண்டு விசாரணை நடத்த கோரி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு பணிகளை புறக்கணித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா மரத்துறையைச் சேர்ந்த முருகேசன் மனைவி சிவரஞ்சனிக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த 6 தேதி சுகப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை சுயநினைவின்றி இருந்ததால் பச்சிலை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறையில் இறந்த குழந்தையை ப்ரீசர் பாக்ஸ் இல் வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பானுமதி இறந்த குழந்தையின் பெற்றோர் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த மருத்துவர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துதுவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் பெற்றோர்கள் உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் மருத்துவர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை மட்டும் மருத்துவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 21 மருத்துவர்கள் பணியில் உள்ள நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணி முதல் தற்போது வரை நோயாளிகள் காத்து கிடைக்கின்றனர். பள்ளி மாணவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் மருத்துவர்கள் இல்லாததால் திரும்பி வேறு மருத்துவமனைக்கு சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் சங்க பொறுப்பாளர்கள் கூறுகையில் அரசு விதிமுறைகளை மீறி மருத்துவர்களிடம் விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுத்த மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரை தற்காலிக பணிநீக்கம் செய்த உத்தரவு ஆணையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், வெளிமாவட்ட சிறப்பு மருத்துவர்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும், முறையான விசாரணைக்கு பின் தவறு இருந்தால் மட்டும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்னிச்சையாக அரசு விதிகளை மீறி சஸ்பென்ட் ஆணையை வழங்கிய இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்த உத்தரவு ஆணையை வாபஸ் பெறாவிட்டால் மாநிலம் மற்றும் மாவட்ட சங்கங்கள் அவசர கூட்டங்கள் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

திண்டுக்கல் அருகே பாதாள சிவலிங்கத்திற்கு அடியில் தோன்றிய நீர் ஊற்றால் பரபரப்பு

கூட்டுறவு வேளான்மை வங்கி மூலமாக மகளிர் குழுக்களுக்கு கடன்