in

புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லக்கூடிய சாலை மூடல்…

புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லக்கூடிய சாலை மூடல்…

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது….

இந்த நிலையில் இன்றும் நாளையும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருக்கிறது இந்த நிலையில் புதுச்சேரியில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கக்கூடிய பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதையை காவல்துறையினர் மூடி உள்ளனர்

இதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இல்லாமல் வெறுச்சோடி காணப்படுகிறது….

இதேபோல் புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காவல்துறை முன்னெடுத்து வருகிறது…

மேலும் கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர் ஆனால் அதை மீறி கடற்கரைக்கு படையெடுத்து வண்ணம் உள்ளனர்….

What do you think?

புதுச்சேரியில் மேகமூட்டமுடன் காணப்படும் ரம்மியமான சூழல்

விடாமுயற்சி teaser அவுட்… பொங்கல் ரேஸில் முந்தும் அஜித்தின் திரில்லிங்..?