காரைக்காலில் ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி
புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பாட்கோ கழகம் மூலம் காரைக்காலில் ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை புதுச்சேரி அமைச்சர்கள் சாய் சரவணகுமார் மற்றும் திருமுருகன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பாட்கோ கழகம் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பறவைபேட் பகுதியில் புதிதாக வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
மேலும் புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் புதுச்சேரி மாநில ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு சாலை பணிக்கான அடிகள் நாட்டி தொடங்கி வைத்தனர்.
பின்னர் புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது. காரைக்கால் மாவட்டத்தில் ஆதிராவிட நலத்துறை மூலம் 20 பணிகளுக்காக ரூபாய் 6 கோடியே 50 லட்சம் செலவிடப்பட்டு அப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
இன்னும் புதிதாக 7 பணிகள் காரைக்கால் மாவட்டத்தில் தொடங்கப்பட இருக்கின்றன என்றும் மேலும் 30 கோடி அளவில் காரைக்கால் மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 80 சதவீதம் ஆதிதிராவிடர் மக்களுக்கும் மீதமுள்ள 20 சதவீதம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தெரிவித்தார்.
இதனை அடுத்து விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் இருக்குமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு வெகு நேரம் யோசித்து பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மட்டுமே புதுச்சேரியில் எடுபடும் என கூறி அவசர அவசரமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு சென்ற புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார்.