in

அருப்புக்கோட்டை தமிழ்நாடு கிராம வங்கியில் கொள்ளை முயற்சி

அருப்புக்கோட்டை தமிழ்நாடு கிராம வங்கியில் கொள்ளை முயற்சி

 

அருப்புக்கோட்டை தமிழ்நாடு கிராம வங்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுக வேலன்(50) என்பவர் கைது; கையில் பணம் இல்லை என்பதால் கொள்ளையும் முயற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதியில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கிராம வங்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வங்கியின் சந்துப் பகுதியில் உள்ளே நுழைந்து அங்கு வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்த மஞ்சள் பையை முகமுடி போல அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியில் கொள்ளை முயற்சி ஈடுபட்டார்.

ஆனால் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகார் அடிப்படையில் குற்றப் பிரிவு போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துவக்கினார்.

அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் செங்கோட்டை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகவேலன்(50) என்பது தெரிய வந்தது.

இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஆறுமுகவேலனுக்கு நிறைய கடன் பிரச்சனை இருந்ததாகவும் கையில் சுத்தமாக பணம் இல்லை என்பதால் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

What do you think?

அரசு அதிகாரிகள் தலையிட்டு தன்னுடைய நிலத்தை மீட்டு தர ராணுவ வீரர் கோரிக்கை

பங்குனிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்