ரெயில்வே கோட்டம் அமைய குலவணிகர் ரெயில்வே பாலப்பணிகளை முடிக்க ராபர்ட்புரூஸ் தெரிவித்துள்ளார்
நெல்லையில் ரெயில்வே கோட்டம் அமையவும், குலவணிகர் ரெயில்வே பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவேன் என நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்ட என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலில் வெற்றிபெற்ற உடன் இந்த தொகுதியின் முக்கியமான பணிகள், பிரச்சனைகளை ஆய்வு செய்து என்ன என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பொதுமக்களை சந்தித்து அவரிகளிட் விவாதித்து பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.
மாஞ்சோலையைப் பொறுத்தவரை அங்கு உள்ள தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு முக்கியம், தமிழக அரசும் அவர்களுக்கு ஆதரவான முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.
மேலும் மாஞ்சோலைக்கு நேரில் சென்று தேயிலைத் தோட்ட நிறுவன்தாரையும் சந்தித்து தொழிலாளர்களுக்கு கடந்த 15- ந்தேதியுடன் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது முடிவு எட்டும் வரை ஊதிய வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன்.
விருப்ப ஓய்வு வழங்க கூடாது என கூறியுள்ளேன் இதுகுறித்து அவர்கள் நல்ல முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். நெல்லையில் ரெயில்வே கோட்டம் அமையவும் , குலவணிகர் ரெயில்வே பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, இந்த பணிகள் நடக்க முழு முயற்சி மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.