ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா திருமணம் நேற்று நடந்தது
கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் தற்போது வெள்ளித்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
இவரது மகள் இந்திரஜா ஷங்கரும் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்திரஜா ஷங்கரும் சர்வைவர் என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார், ஆரம்பத்தில், இந்திரஜா நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது, அவரால் எப்படி சமாளிக்க முடியும் என்று பலர் யோசித்தனர்.
தற்போது பல தமிழ் படங்களில் நடித்து வரும் இவர் தனது அம்மாவின் சகோதரர் கார்த்திக்குடன் பிப்ரவரி 4 ஆம் தேதி நிச்சயதார்த்தம், நடைபெற்றது.
இயக்குநராக இருக்கும் கார்த்திக், தொடர்வோம் என்கிற தன்னார்வலத் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
நேற்று (Mar 24) இந்திரஜா சங்கர், கார்த்திக் திருமணம் மதுரையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. திருமண விழாக்களில், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சினி துறையைச் சேர்ந்த சில பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.