in ,

உலக நலன் வேண்டி நாமக்கல் பரமத்தி அருகே பீமேஸ்வரர்சிவ ஆலயத்தில் ருத்ர ஹோமம்

உலக நலன் வேண்டி நாமக்கல் பரமத்தி அருகே பீமேஸ்வரர்சிவ ஆலயத்தில் ருத்ர ஹோமம்

 

நாமக்கல் மாவட்டம்,  பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே திருமணிமுத்து ஆற்றங்கரை மாவுரெட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள
வேதநாயகி அம்பிகா சமேதா பீமேஸ்வரர் சிவ ஆலயத்தில்

உலக நலன் வேண்டியும், பருவத்தில் பருவமழை வேண்டியும், இயற்கை வளம் செழிக்கவும், மக்கள் நோய் இன்றி வாழவும், ருத்ர ஹோமம் செவ்வாய் மாலை கோவில் வாளகத்தில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகவேள்வி அமைத்து பின் பூர்ணாகதி நிறைவுற்ற பின் ருத்ர ஹோமம் நிறைவுற்றது.

அதனைத் தொடர்ந்து அப்போதுவேதநாயகி அம்பிகா சமேதா பீமமேஸ்வரக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம் கலச தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் மாவுரெட்டி  மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ருத்ர ஹோமத்திற்கான ஏற்பாடுகளை மாவுரெட்டி பீமேஸ்வரர் கோயில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

What do you think?

2026ல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள், “Wait and see” என செல்லூர் ராஜு

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவிலில் ஆஷாட ஏகாதசி சிறப்பு பூஜை