in

S.R.K. மேல்நிலைப் பள்ளியின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி


Watch – YouTube Click

S.R.K. மேல்நிலைப் பள்ளியின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி

 

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் S. R. K. மேல்நிலைப் பள்ளியின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி. புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தில் கடந்த 24 ஆண்டுகளாக ஒழுக்கம், கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி ஆகியஅனைத்திலும் சிறப்பாக இயங்கி வரும் S.R.K. மேல்நிலைப் பள்ளியின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குS.R.K. கல்விக் கழக நிறுவனர் தியாகராஜன் தலைமை தாங்கிட வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்,சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் தேசிய வண்ணம் கொண்ட பலூன்களை காற்றில் பறக்க விட்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

முன்மாதிரியாக கரிக்கலாம்பாக்கம், பாகூர் மற்றும் உருவையாறு பகுதிகளில் மாணவர்கள் பாரதமாதா, விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், நேதாஜி, ஜான்சி ராணி,வேலு நாச்சியார், வாஞ்சிநாதன், வ. உ.சி, பாரதியார், கொடிகாத்த குமரன், மற்றும் பாரதிதாசன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களாக மாறுவேடம் அணிந்துபேரணியாக சென்று நம் தேச நலன் காத்திட வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 100% ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வலியுறுத்தியும், நம் சமூகத்தின் பெரும் கரும் புள்ளியான சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதற்காகவும் மற்றும் நம் இளைய சமுதாயத்தை அழிவு பாதைக்கு இழுத்துச்செல்லும் போதை பழக்கத்தை அழிப்பதற்கும் என மூன்று அவசியமான கோரிக்கை பதாகைகளை ஏந்திக்கொண்டு, மக்கள் மனதில் எழுச்சியூட்டும் விதமான முழக்கங்களை எழுப்பி சென்றனர்.

பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தைவானில் நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை மக்கள் பீதி

ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு