in

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2024-ம் ஆண்டிற்கான சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2024-ம் ஆண்டிற்கான சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2024-ம் ஆண்டிற்கான சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை.

முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, ஜாம்பவனோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட 6 இடங்களிலும்  கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று கடல் பகுதியிலிருந்து வரும் மீனவர்களின் படகு சுற்றுலா பயணிகளின் படகுகள் உள்ளிட்டவற்றை  சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் கடல் வழியாக யாரேனும் புதிய நபர்கள் வந்தால் உடனடியாக கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் இலவச எண் 1093 என்னை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் தம்பி கோட்டை கீழக்காடு பேட்டை, கோபாலசமுத்திரம், உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாகர் கவாச் ஒத்திகையில் கடலோர குடும்ப பாதுகாப்பு போலீசார் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

What do you think?

நடிகர்கள் கட்சி தொடங்குவது பெரிதல்ல மக்களுக்கான கட்சியாக இருக்க வேண்டும் – செல்லூர் ராஜு பேச்சு

வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா 5ம் திருநாள் கருட சேவை