in ,

காஞ்சிபுரம் பால தர்மசாஸ்தா ஆலயத்தில் சகஸ்ரநாம பாராயணம் பூர்த்தி விழா சங்காபிஷேகம்

காஞ்சிபுரம் பால தர்மசாஸ்தா ஆலயத்தில் சகஸ்ரநாம பாராயணம் பூர்த்தி விழா சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகத்துடன் விமர்சையாக நடைபெற்றது.

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி வாழ்வு பெற வேண்டி காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள புத்திர பாக்கியம் அருளும்ஸ்ரீ பால தர்மசாஸ்தா ஆலயத்தில் அனுதினமும் 1008 சகஸ்ர நாம பாராயணம் செய்யப்பட்டு 48 நாட்கள் நிறைவு பெற்று பூர்த்தி விழா நடைபெற்றது.

ஆலய தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று 108 சங்கு மற்றும் கலசங்கள் வைத்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று மூலவர் மட்டும் உற்சவர் பாலதர்ம சாஸ்தாவிற்கு கலசாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை தலைவர்செந்தில் துணைத் தலைவர் அருள் குமரன் செயலாளர் ஜெயராஜ் பொருளாளர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் சாரங்கபாணி குமரன் பரமசிவம் தணிகமலை. சிவப்பிரகாசம் ஏகாம்பரம் தினேஷ் என்கின்ற தனசேகரன் சரவணன் மற்றும் நிர்வாக ஆலோசகர் ரமேஷ் ராஜ் ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர் இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக உலக மக்கள் நன்மை கருதி சகஸ்ரநாம பாராயணம் இந்த ஆலயத்தில் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

What do you think?

செஞ்சி அடுத்த செத்தவரை கிராமத்தில் அமைந்துள்ள சொக்கநாதர் கோவிலில் 48-வது நாள் மண்டல நிறைவு பூஜை

திருவெறும்பூரில் அமைந்துள்ள மலைக்கோயில் ஸ்ரீநறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி ஆய்வு