புதுச்சேரியை முத்தியால்பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சிபிஎஸ்இ பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டி ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது.
புதுச்சேரியை முத்தியால்பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 22-ஆம் ஆண்டு ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவும், கல்வி வளம் சிறக்கவும் ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரை தரிசனம் செய்தனர்.
இதே போல் பொதுத்தேர்வு நடைபெறும் அன்றைய தினங்களில் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற உள்ளது.