in

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டங்கள், தி.மு.க.,அரசின் மடை மாற்றும் செயல்,’’ என்று பா.ஜ., கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்கள், தி.மு.க.,அரசின் மடை மாற்றும் செயல்,’’ என்று பா.ஜ., கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

திருச்சியில், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, தொடர்ந்து, பல்வேறு வகையில் மக்கள் விரோத செயல்களில் செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, புதிய புதிய வடிவங்களில் மாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை.

ஆட்சிக்கு எதிராக, மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதை மாற்றுவதற்கு புதிய வழிமுறையை கண்டுபிடிப்பார்கள். அந்த வழிமுறையைத் தான் கடந்த 12 நாட்களாக, தி.மு.க., அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால், போராட்டம் நடத்துவதாக ஓலமிடுகின்றனர்.

இதன் வாயிலாக, மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு தான் நிதி கொடுக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? மத்திய அரசு தான் இந்திய பேரரசு என்பதை, போராட்டங்கள் வாயிலாக ஒத்துக் கொள்கிறீர்கள்.

தி.மு.க., ஆட்சியின் பலவீனங்களை, சட்டம்– ஒழுங்கு பிரச்னைகளை மறைப்பதற்கு, மக்கள் மீதான புதிய வரிச்சுமைகளின் தாக்கத்தை மறைப்பதற்கு தி.மு.க.,வினர் நடத்தும் நாடகம் இது. பொத்தாம் பொதுவாக, தமிழக முதல்வர் சொல்லி விட்டு போகக் கூடாது. மத்திய அரசு தரப்பில் இதுவரை கொடுத்த நிதி ஒதுக்கீடுகளுக்கு, தமிழக அரசு முறையான அறிக்கை தரவில்லை.

முதுகு முழுமையும் சாக்கடையை துாக்கிக் கொண்டு, தமிழக முதல்வர் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறார். மத்திய நிதியமைச்சர், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு பற்றி தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக பிரித்ததால், தலைநகர வளர்ச்சிக்காக, மத்திய அரசு, 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அதே போல், தமிழகத்தையும், சேலம், திருச்சி, மதுரை போன்ற நகரங்களை தலைநகரமாக வைத்து, மூன்று மாநிலங்களாக பிரித்தால், ஒரு தலைநகருக்கு 15 ஆயிரம் கோடி வீதம், 45 ஆயிரம் கோடி ரூபாய் 15 நாட்களில், மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தரத் தயார். ஆந்திராவுக்கு கொடுத்த நிதி கிடைக்க வேண்டும் என்றால், தமிழகம் பிரிக்கப்பட வேண்டும். அதற்கு, தி.மு.க., அரசு தயாரா? பிற மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடை காரணம் காட்டி, தமிழக முதல்வராக இருப்பவர், பிரதமர் மீது குற்றம் சாட்டக் கூடாது.

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., எதையும் இழக்கவில்லை. தி.மு.க.,வின் ஆதிக்கம் உள்ள இடங்களில் கூட, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் உயர்ந்து தான் இருக்கிறது. தேர்தல் தோல்வி ஏற்பட்டதால், தமிழகத்துக்கு எதையும் செய்யாமல் இல்லை.

கடந்த 2014ம் ஆண்டு முதல், தமிழகத்துக்கு 11 லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசு கொடுத்துள்ளது. எதை மறைப்பதற்காக, இதையெல்லாம் இல்லை என்று சொல்ல வேண்டும்.

தி.மு.க.,வின் அயலக உறவு அணி, போதை மருந்து கடத்தலுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதை மறைப்பதற்காகத் தான், கட்டணி கட்சிகளோடு சேர்ந்து போராட்டங்களை நடத்துகிறது.

தேசம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரத்தில், தேசத்தின் மீதான பற்றுதலை குறைப்பதும், மத்திய அரசின் வலிமையை நாட்டு மக்களிடம் குறைத்துக் காட்டுவதும் தேச விரோத செயல் தான்.

சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற அண்டை நாடுகள் பல்வேறு சீர்கேடுகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ஒரு முகமாக நிற்க வேண்டிய காலக்கட்டத்தில், தேசத்தின் மீது அக்கறை இல்லாமல், தேசத்தை காட்டிக் கொடுக்கக் கூடாது.

போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பிக் கொடுக்காததால், பல குடும்பங்கள் அழிந்து விட்டன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள் அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இதுவும், தமிழக அரசின் மடை மாற்றும் செயல் தான். ஸ்டாலினை முதல்வராக பார்த்த பின், முதல்வராவதை பெரிய விஷயமாக கருதவில்லை.

ஸ்டாலினை ‘தத்தி’ என்று சொன்ன கருணாநிதியே, அவரை முதல்வராக்கினார். டோப்பா வைத்தவர் முதல்வராகும் போது, டோப்பா வைக்காதவர் முதல்வராகட்டும். ஸ்டாலின் முதல்வராகி விட்டார் என்பதற்காக, என் கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது.

தி.மு.க.,வினர் மீதான வழக்குகளில், பா.ஜ., தலையீடு இல்லை என்பது தான் உண்மை. டில்லி முதல்வர் சிறையில் இருந்த போதே ஏழு எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். ஒருவேளை இந்த முதல்வர் உள்ளே போய் இருந்தால், 40 தெ்ாகுதியும் பா.ஜ., வெற்றி பெற்று இருக்கும். தி.மு.க.,வினர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் தான், ஏற்பட்ட வெறுப்பு காரணமாக மக்கள், பா.ஜ., புறக்கணித்து விட்டனரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

What do you think?

முசிறி அருகே பாலப்பட்டி கிராமத்தில் நில தகராறில் விவசாயி வெட்டி கொடூர கொலை

முசிறி அருகே கள்ளக்காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை