செஞ்சியில் சைவ சித்தாந்த சுடர் பட்டமளிப்பு மற்றும் பஞ்சபுராணம் பாராயணம் சான்று வழங்கும் விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திருமுறை கழகம் சார்பில் சைவ சித்தாந்த சுடர் பட்டமளிப்பு மற்றும் பஞ்சபூரணம் பாராயணம் சான்று வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக செஞ்சி திருவண்ணாமலை சாலை தேசூர் பாட்டை சந்திப்பில் அமைந்துள்ள இரட்டைப் பிள்ளையார் கோவிலில் திருமுறைகழக கௌரவ தலைவர் மருத்துவர் ஆத்மலிங்கம் தலைமையில் திருமுறை கழகம் பொறுப்பு தலைவர் வடிவேல் முன்னிலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கந்தர்வகோட்டை கயிலை அறக்கட்டளை முனைவர் கயிலை துரைசாமி ஐயா அவர்களுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பனமலை தாளகிரீஸ்வரர் கைலாய வாத்திய குழுவினரால் சிவவாத்தியம் முழங்க ஊர்வலமாக அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டு
சைவ சித்தாந்தம் படித்த மாணவ மாணவிகளுக்கு சிவ தொண்டர்களுக்கு சைவ சித்தாந்த சுடர் பட்டமளிப்பு விழா கந்தர்வகோட்டை கயிலை அறக்கட்டளை முனைவர் துரைசாமி வழங்கினார்.
திருக்கோவிலில் பெண் பக்தர்களின் கோலாட்டம் கும்மியாட்டம் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்
திருமுறை கழக உறுப்பினர்கள் சிவ தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருமுறைக் கழக சிவ தொண்டர்கள்,கோயில் நிர்வாகிகள் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். சைவ சித்தாந்த பஞ்சபுராணம் பாராயணம் பற்றி கந்தர்வகோட்டை கயிலை அறக்கட்டளை முனைவர் கயிலை துரைசாமி சிறப்பு உரையாற்றினார்.