in

மலர் சந்தையில் களை கட்டிய ஆயுத பூஜை

நிலக்கோட்டை மலர் சந்தையில் களை கட்டிய ஆயுத பூஜை மலர் விற்பனை
கதம்ப மாலை மலர்களுக்கு கடும் கராக்கி
மல்லிகைப்பூ விலையை மிஞ்சியது அரளிப்பூ விலை ஒரு கிலோ ரூபாய் 900 க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்களை யொட்டி பூக்கள் விற்பனை களைகட்டியது

நிலக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது

இந்நிலையில் மலர் சந்தையில் அதிகாலை முதலே வியாபாரிகள் குவிய தொடங்கியதால் பூக்களை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டது

கதம்பமாலை கட்டப்படும் பூக்களே அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன

அரளிப்பூ விலை உச்சத்தை தொட்டது கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு பை ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட
அரளிப்பூ மல்லிகைப்பூ விலையை மிஞ்சியது வரத்து குறைவு காரணமாக தோட்டங்களில் நேரடியாக ஒரு பை ரூபாய் 700 க்கும் மலர் சந்தையில் ரூபாய் 900 க்கும் விற்பனையானது

ரோஜா பூ கிலோ ரூபாய் 200க்கும்,

நாட்டுச் சம்பங்கி கிலோ ரூபாய் 400க்கும்,

செவ்வந்தி ரூபாய் 200க்கும் விற்பனையானது

வாடாமல்லி, கோழி கொண்டை, துளசி உள்ளிட்ட மாலை கட்டும் அனைத்து பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்தது

வரத்து குறைந்த போதிலும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர் .

What do you think?

நவராத்திரி விழாவை முன்னிட்டு பூவராக பெருமாள் அலங்காரம்

சிலிண்டர் டெலிவரிகள் முடங்கும் அபாயம்