பெண்கள் பெரிதும் பாராட்டி சேலம் போலீஸ் கமிஷனர் திருமதி விஜயகுமாரி ஐ பி எஸ்
சேலத்தில் மாம்பழத்தை அடுத்து,, கடந்த ஒருவருடமாக பெண்கள் பெரிதும் பாராட்டி வருபவர் சேலம் போலீஸ் கமிஷனர் திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ். சேலம் போலீஸ் கமிஷனராக திருமதி. விஜயகுமாரி. ஐபிஎஸ் பொறுப்பேற்று, பிப்ரவரி மாதத்துடன் ஒருவருடம் நிறைவடைகிறது.
இவரது ஒரு, வருட சாதனை பற்றியும், 25 ஆண்டுகளுக்கு மேலாக இவர் காவல்துறை பணியில் செய்த பணிகள் பற்றியும், நமது London Britian Tamil Broadcosting_சிறப்பு பார்வையில் பார்ப்போம்..
ஒருகாலத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே சிரமம், ஆனால் சிலகாலமாக அடுப்பங்கரையை விட்டு வெளியே வந்து, பாரதி கண்ட புதுமை பெண், போல, பெண்கள் பல துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர்.
செய்யும், பணியிலும், கடமைகளிலும், தங்களது செயல்களால் வரலாறு படைத்து வருகின்றனர் பெண்கள்.
அந்தவகையில் பெண் இனத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கும் வகையில், சுமார் 25 ஆண்டுகாலமாக காவல்துறையில் பணியாற்றி பல சாதனைகளை புரிந்த வருதிறார் திருமதி.விஜயகுமாரி ஐபிஎஸ் அவர்கள்.
துணிச்சலும், வீரமும், நேர்மையும் கொண்டு,. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் பணியாற்றி வருவதாக கூறினர் மற்ற காவல்துறையினர். விஜயகுமாரி ஐ.பி.எஸ்., சுமார் 25 வருடம் முன்பு, பெண்ணாலும், சாதிக்க முடியும், என்று, சுயமுயற்சியால், தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ் மூலம் தேர்வு பெற்று, மாமன்னன் ராஜராஜன் ஆண்ட நெற்களஞ்சியதஞ்சையில், வல்லம் உட்கோட்ட காவல் நிலையத்தில், டி.எஸ்.பியாக பணியாற்றினார், பின்னர் கள்ளகுறிச்சி, சென்னை, என காவல்துறையில் சாதனையாளராக பணியாற்றி ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்றார்.
பின்னர் காவல்கண்காணிப்பாளர், Deputy Inspector General, என பதவி உயர்வு பெற்று, தற்போது ஐ.ஜி அந்தஸ்தில், சேலம் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
ஒரு காவல் அதிகாரியை பொறுத்தவரை, அவர்கள், கடந்துவரும், பாதை என்பது மிக கடினமானது, காவலர் முதல்,டி.ஜி.பி வரை காக்கிசட்டை போட்டு கடமை ஆற்றுபவர்களுக்கு மட்டுமே அந்த கடுமையான பணி பற்றி தெரியும். காரணம் காவல் பணி என்பது, அதிகாரம் கொண்டதுதான். ஆயினும்,இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட .கத்தியை கையில்கொண்டு, முள் மீது நடப்பதுபோல் ஆகும்.
விடுமுறையே இல்லாது, 24 மணி நேர வேலை, எந்த ஒரு பிரச்னைக்கும் முழு பொறுப்பு என ஏராளமான பொறுப்புகளை கொண்டது, காவல் பணி.
அரசாங்கம், நீதிமன்றம், உயரதிகாரிகள், பொதுமக்கள், எனஅனைத்தையும் கவனித்து, பனியாற்ற வேண்டும். 25 வருடம் முன்பு முதன்முதலாக
வல்லம் காவல் உட்கோட்ட, டி.எஸ்.பியாக பணியாற்றியபோது, திருமதி, விஜயகுமாரி ஐ.பி.எஸ்.அவர்களின, மறக்கமுடியாத சம்பவம் வல்லம் குறுவாடிபட்டியில் இருந்த சாராயத்தை அடியோடு ஒழிக்க எடுத்த நடவடிக்கையே ஆகும்.
தனது சகோதரியின் திருமணம் நடந்தஅன்று கூட விடியற்காலை 5 மணி வரை
கள்ளசாராய ஒழிப்பு பணியை முடித்துவிட்டு தான் தனது சகோதரியின்
திருமணத்திற்கு சென்றார். கடந்த ஒரு வருடம் முன்பு, ஆவடி போக்குவரத்து
பிரிவில் அதிகாரியாக இருந்த விஜயகுமாரி,ஐ.பி.எஸ்.
2023 பிப்ரவரியில், பதவி உயர்வு பெற்று, சேலம், போலிஸ் கமிஷனராக நியமிக்கபட்டார். இதையடுத்து அவர் விவேகத்துடன் கூடிய மாற்றங்கள் பல கொண்டுவந்தார்.
அதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது தெரியவந்தால், அவர்கள் பெற்றோர்கள்தான் பொறுப்பு என அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், 3 வருடமாக காலியாக இருந்த, I.S.இன்ஸ்பெக்டர் பதவிக்கு அதிகாரியை நியமித்தார். மேலும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயரவேண்டும், பெண் குழந்தைகள் மீதான மதிப்பு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உயர்ந்தால் போக்சோ சட்ட வழக்குகள் குறையும், பெண், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை பெற்றோர்கள் எடுத்து சொல்லவேண்டும் போன்ற, விழிப்புணர்வு கருத்துக்களை பள்ளிகளின் நிகழ்ச்சியில், தான்சிறப்பு விருந்தினராக செல்லும் வேளையில் கருத்துக்களை வலியுறுத்தி வருகிறார். விஜயகுமாரி ஐ.பி.எஸ். அதிகாரி.