in

ஆடி மாத கடைசியை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை

ஆடி மாத கடைசியை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.

இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.

இந்த ஆடி மாதம் கடைசி என்பதால் கிராமப்புறங்களில் திருவிழாக்கள் இன்றும் நாளையுடன் கோயில்களில் கிடா வெட்டுகள் அதிகமாக இருக்கும் இந்த ஆடி மாதத்தை ஒட்டி  இன்று அய்யலூரில் கூடிய ஆட்டுச் சந்தை களை கட்டியது.

அதிகாலை 3 மணி முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை  வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். செம்மறி ஆடுகளை விட வெள்ளாட்டுக் கிடாய்கள் அதிக அளவில் விற்பனை ஆனது.

10 கிலோ எடையுள்ள வெள்ளாடு கிடா 11,000 ஆயிரம் ரூபாய்க்கும், செம்மறி ஆடு ரூபாய் 6500 -க்கும் விற்பனை செய்யப்பட்டன. நாட்டுக்கோழி 450 ரூபாயிலிருந்து 550ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறியபோது ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளி நாளை ஆகையால் ஆடி மாத திருவிழாக்கள் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் இன்று அய்யலூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. செம்மறி மற்றும் வெள்ளாடு (மருக்கை. பெட்டை ஆடுகள்) விற்பனை சற்று மந்தமாக இருந்தது.

மேலும்  இன்று ஒரே நாளில் மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக தெரிவித்தனர்.

ஆடி மாத கடைசி நாள் விசேஷங்களை முன்னிட்டு  ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

தேசியக்கொடி வண்ணத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி என்.ஐ.டி …

நாகையில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழா