எந்த நடிகரும் செய்யாத விஷயத்தை செய்த சல்மான்கான்
400 கோடி போட்டு எடுக்கப்பட்ட Sikanthar திரைப்படம் உலக அளவில் 170 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
போட்ட காசை கூட எடுக்க முடியாமல் திணறுகிறார் தயாரிப்பாளர். ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சல்மான் கான் பெருதும் நம்பி இருந்த சிகந்தர் படத்தின் படு தோல்வியை இருவரும் எதிர்பார்க்க வில்லை.
சல்மான்கான் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை சிக்கந்தர் படத்திற்காக செய்திருக்கிறார். சல்மான் கான் படம் பார்த்த ரசிகர்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் பேசி இருக்கிறார்.
படத்தில் என்ன என்ன குறைகள் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார் அவர்கள் படத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும் படம் இணையத்தில் வெளியானது கூட இப்படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியிருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் கேட்ட சல்மான் கான் தனது அடுத்த படத்தில் இப்படிப்பட்ட குறைகள் இருக்காது என்று உறுதி அளித்திருக்கிறார்.
படத்தின் தோல்வியை ஒத்துக் கொள்ளாத ஹீரோக்கள் மத்தியில் சல்மான்கான் தன் படத்தின் தோல்வியை ரசிகர்கள் மத்தியில் ஒத்துக் கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நம்ம ஹீரோக்கள் கோடியில் சம்பளத்தை வாங்குன உடனே நம்ம வேலை முடிச்சதுன்னு நடைய கட்டிருவாங்க.