in

தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா சாகுபடி விவசாயிகள் போராட்டம்

தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா சாகுபடி விவசாயிகள் போராட்டம்

 

வேதாரண்யம் அருகே தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி தாணிக்கோட்டகம் தடுப்பணையில் ஏறி விவசாயிகள் போராட்டம்.

நாகை மாவட்ட கடைமடை பகுதியான தாணிக்கோட்டகம், வடமைழை, பிராந்தியங்கரை, மூலக்கரை, தரகமருதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி திறக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் இதுவரை சரிவர தண்ணீர் வரவில்லை . இப்பகுதி விவசாயிகள் 5000 ஏக்கருக்கு மேல் சம்பாசாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் விதை நெல் தெளிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கவில்லை தண்ணீர் வராத காரணத்தினால் கருகத் தொடங்கியுள்ளது .இதனை பலமுறை பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கூறியும் தாணிக்கோட்டகம் வரை தண்ணீர் திறந்து விடவில்லை

இதனை கண்டித்து தாணிக்கோட்டகம் தடுப்பணையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் கருணைநாதன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வயல்களில் நெல்மணிகள் தண்ணீர் கிடைக்காத காரணத்தால் முளைக்கவில்லை இதனை எடுத்து காண்பித்து விவசாயிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

உடனடியாக சம்பா சாகுபடி பணிக்கு தாணிக்கோட்டகம் வரை தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் ஓரிரு நாளில் செங்காதலை பகுதியில் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்,

What do you think?

புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை

ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி… பிரிய மனம்மில்லாமல் பிரிகிறேன்