in

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகும் சம்பா


Watch – YouTube Click

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகும் சம்பா

 

நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகும் சம்பா, தாளடி பயிரை காப்பாற்ற பாசனத்திற்காக உடனடியாக கூடுதலாக 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடக் கோரி நாகை மாவடத்தில் கீழ்வேளூர், சாட்டியக்குட, கரியாப்பட்டினம் உள்ளிட்ட 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாமல் சம்பா, தாளடி நெற் பயிர்கள் கரும் நிலையில் உள்ளது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிரடப்பட்டுள்ள நிலையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் உடனடியாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழ்வேளூர், சாட்டியக்குடி, கரியாப்பட்டினம் 7 இடங்கள் விவசாயிகள் மற்றும் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேலூரில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சம்பா, தாளடி பயிரை காப்பற்ற கூடுதலாக 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும், ஓடம்போக்கி, கடுவையாறு, தேவநதி ஆறுகளில் பாசனம் பெறும் நிலங்களுக்கு கூடுதலாக தண்ணீர் விட கோரியும், பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கு உடனடியா இழப்பீடு வழங்க கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கீழ்வேளூரில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திருவாரூர், நாகை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

3 ஏக்கரில் பயிரிட்டு அசத்தி வரும் பட்டதாரி பெண்

தமிழக அரசு 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்