in

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி

 

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி திருநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவிலில் மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இக்கோவிலில் ஸ்ரீ வாராஹி அம்மன் பிரம்மாண்டமான அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பஞ்சமி திருநாளில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர் முன்னதாக பிரம்மாண்ட அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீவராகி அம்மனுக்கு அன்னம் பழங்கள் இனிப்பு வகைகள் கிழங்கு வகைகள் வைத்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து சிறப்பு பூஜைகளை நடத்தி கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் ஐந்துமுக தீபம் தீபம் உள்ளிட்ட பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

What do you think?

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை நகைகளை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

16-ம் ஆண்டு கருட பஞ்சமி விழா 10108 மகா சகஸ்ர தீப வழிபாடு கருட சேவை