in ,

மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆஷாட நவராத்திரியின் மூன்றாம் நாளான நேற்று மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு 

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன.ஆனி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மங்கள வராகி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன மூன்றாம் நாளான நேற்று பால் பன்னீர் மஞ்சள் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடச தீபாரதனைகளுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

பெருந்தோட்டம் கிராமம் அருகில் 200 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொழிற்சாலை திட்டத்தை தடுக்க வேண்டும் மூன்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு